தன்மானம் - தங்கத் தமிழ் மொழியில் தனிச் சிறப்புமிக்க வார்த்தைகள் பல உண்டு. அவற்றுள் தலையாய ஒன்று இந்த 'தன்மானம்.' இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் Self respect ; Self Esteem என்று வரும். ஆனால் இந்த வார்த்தைகள் தமிழில் வரும் அதே பொருளோடு வருவதில்லை. இது தான் நம் மொழியின் சிறப்பு. ஆனால் இன்று தமிழில் இந்த வார்த்தைக்கான அர்த்தம் தேடினால்?
கிடைக்கும் ஒரு வார்த்தை இன உனர்ச்சி.
தன்மானம் என்பது இன உணர்சிதானா? தன்மானத் தமிழன் என்று சொல்வது அதனால்தானா?
இன உணர்ச்சி என்ற பெயரில் நடப்பது என்ன? இந்த சொல்கொண்டு செய்யப்படும் சில கீழ்தரமான செயல்கலைக் கானும்போது இது உன்மையிலே இன உனர்ச்சியா அல்லது நம்மை நாமே இகழ்ந்துகொள்ளும் செயலா என்ற எண்ணம் தோன்றுகிறது.
இனவிடுதலைபற்றி பேசுகிறேன் என்று சொல்பவர்கள் வியாபரம் மட்டுமே செய்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கு இது அரசியல். சினிமா பிரபலங்களுக்கு இது ஒரு விளம்பர யுத்தி.மொத்ததில் இவர்கள் நாடுவது சுயலாபம் மட்டுமே. ஆனால் மக்கள் மனதில் விதைக்கப்படுவது? விஷம்.
இதுகுறித்து சமீபத்தில் சினிமா பத்திரிக்கை ஒன்றில் படித்த கட்டுரை பற்றிக் கூற வேண்டும். நட்சத்திரன் என்பவர் எழுதிய அந்த கட்டுரை, சினிமா உலகில் இன உணர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் வியாபாரத்தை தோலுரித்துக் காட்டியது. ஈழப் பிரச்சனை குறித்து பேசப்படும் வசனங்களையும், தமிழர்களின் பெருமை பேசும் காட்சிகளையும் தொலைக்காட்சிகளில் பத்து நிமிடத்திற்க்கு ஒரு முறை ஒளிபரப்புவதை விளம்பரம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லமுடியும்?
நம் உனர்ச்சிகளை தூண்டி அதன் மூலம் வியாபாரம் செய்வது தான் இவர்கள் காடும் இனப்பற்று.
இதுபோன்ற விஷயங்களை வியாபாரம் என்று எடுத்துக் கொண்டால், இன்னும் மட்டமான செயல் ஒன்று இந்தத் திரைத் துறையில் செய்யப்படுகிறது.
நமக்கும் அண்டை மாநிலங்களுக்கும் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அப்போது இன உணர்ச்சி என்று சொல்லிக்கொண்டு சில விஷமிகள் திரைத் துறையில் செய்யும் கலகங்கள் வேதனையடையச் செய்கின்றன. பிரச்சினையிலிருக்கும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் நம் தமிழ் சினிமாவில் நடித்துகொண்டிருந்தால்,அவர்ளிடம் இது பற்றி கருத்துக் கேட்டு அவர்களை தர்மசங்கடப்படுத்தி அதில் விளம்பரம் தேடிக்கொள்ள சிலர் இருக்கிறார்கள். உதாரனமாக இப்பொது கேரளவிற்கும் தமிழகத்திற்கும் இப்பொது முல்லைப் பெரியாறு பிரச்சினை நடந்து வருகிறது. மலையால நடிகர் ஜெயராம் பிறப்பால் ஒரு தமிழர். மலையால சினிமாவில் நடித்து புகழ் பெற்று அங்கேயே இருக்கிறார்.ஆனால் அவரது குடும்பமும் சொந்த பந்தங்களும் இன்னமும் தமிழ் நாட்டில் இருக்கலாம். இன்னிலையில் அங்குள்ள கலகக்காரர்கள் சிலர் அவரிடம் கேரளாவிற்கு ஆதரவாக கருத்து சொல்லச் சொன்னாலோ, அவதூறாக பேசினாலோ, அந்த நடிகரது நிலையை யோசித்துப் பாருங்கள்.
வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பிழைப்புத் தேடி நம்மூருக்கு வந்திருந்தாலும், அவர்களது குடும்பமும் சொந்த பந்தங்களும் அவரது ஊரிலயே இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர் நமக்கு சாதகமாக ஒரு பிரச்சினையில் கருத்து தெரிவித்தால் அங்கு இருக்கும் அவரது சொந்தங்களுக்கு ஏற்படும் இன்னல்கலைப் பற்றி இந்த இன உணர்ச்சியாளர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. இதுபோன்ற சிக்கல்கலைக் கருத்தில்கொண்டு, பிழைப்புத் தேடி வந்தவர்கள் பிரச்சினையிலுருந்து ஒதுங்கி இருந்தாலும் வழியச் சென்று அவர்களிடம் கருத்து கேட்டு அவர்களுக்கு இன முத்திரை குத்த நினைப்பதும் அதில் இவர்கள் விளம்பரம் தேடிக்கொள்வதும் எத்தனை கீழ்தரமான செயல்?
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னும் நம் பாரம்பரியத்திற்க்கு நாம் இகழ்ச்சியல்லாது வேறு என்ன செய்கிறோம்?
நம் தமிழ் நாட்டில் மட்டுமே நடக்கும் அவலமல்ல இது. அரசியல் காரனங்களுக்காக எல்லா மாநிலங்களிலும் செய்யப்படும் தந்திரங்கள்தான்.
இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் முல்லைப் பெரியாறு அனைப் பிரச்சினை கூட இது போன்ற அரசியல் லாபத்துக்காக தூண்டிவிடப்பட்டதே. விரைவில் வரப் போகும் இடைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு கேரள அரசும், கட்சிகளும் செய்யும் தந்திரங்களே இன்றைய பதட்டமான சூழ்னிலைக்குக் காரனம்.
இது போன்ற விஷயங்களை மக்கள் உணர்ந்து, சில கீழ்தரமான அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது. போராட்டங்கள் எப்போதும் மக்களிடமிருந்தே துவங்குகிறது. அரசியல்வாதிகளிடமிருந்தல்ல. அந்தப் போராட்டங்களுக்கான தலைவன் மக்களிடமிருந்துதான் தோன்றிகிறான். அரசியல் தலைவர்களிடமிருந்து அல்ல. அன்னா ஹஜாரே நிகழ்த்திய போராட்டதிற்க்கு கிடைத்த ஆதரவு இதற்கு சமீபத்திய உதாரணம்.
ஆகவே மக்கள் இதை உணர்ந்துகொண்டு, இப்படிப்பட்ட கீழ்தரமான அரசியல்வாதிகளையும், கிளர்ச்சியாள்ர்களையும் இனம் கண்டு செயல்படவேண்டும்.
nanru pradeep....vaalthukkal....
பதிலளிநீக்கு